தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.கடந்த அக்டோபர் மாதம் தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 2,35,025 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தெரிவு செய்யும் மாணவர்கள் 1500 பேருக்கு பள்ளி கல்வி இயக்ககம் மாதந்தோறும் ரூ.1500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதேர்வின் முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.