உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுதும் மாணவிகளுக்கு கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

திருவாரூர்: திரு.வி.க., அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள், பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறை தலைவர்கள் மீது மாணவிகள் புகார் அளித்திருக்கின்றனர். அப்படியொரு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னை அண்ணா பல்கலையில், அங்கேயே பயிலும் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், திருவாரூர் அரசு கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்த விஷயத்திலும் தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்