உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை விவகாரம்: புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

கோவை: அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த, பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, புதியதமிழகம் கட்சி சார்பில் வரும், 6ம் தேதி சென்னையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.புதிய தமிழகம் கட்சியின், மாநில பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கோவை, குனியமுத்துாரில் நடந்தது. கூட்டத்தில், அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள், சுய விளம்பரம் தேடும் போராட்டங்களை தவிர்த்து, மாணவ - மாணவியரை காக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.கட்சியின் சார்பில் வரும், 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டமும், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் தலைமையில், அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லுாரிகள், பள்ளிகள் முன்பாக துண்டறிக்கை வினியோகமும் நடத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்