உள்ளூர் செய்திகள்

கோவை ஐ.டி., துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

கோவை: கோவை மீது, ஐ.டி., நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ள நிலையில், இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.கோவையில் ஐ.டி., துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையும் கோவை மீது திரும்பியுள்ளது.விளாங்குறிச்சியில், எல்காட் தொழில்நுட்ப பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது. 2.94 லட்சம் சதுர அடி பரப்பிலான இப்பூங்காவால், 3,000 - 4,000 பேருக்கு வேலை கிடைக்கும். மும்பையைச் சேர்ந்த ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், டான்னி ஷெல்டர்ஸ், ஆம்பர் குழுமம், வின்பிரா நிறுவனம் ஆகியவையும், கோவையில் கால்பதிக்கின்றன. சர்வதேச நிறுவனமான, பிரான்சை சேர்ந்த டசால்ட் சிஸ்டம்ஸ் (3டி) நிறுவனம், கோவையில் அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதனால், ஐ.டி., துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.முன்னணி ஐ.டி., நிறுவனமான ஜோஹோவுக்காக, பல்வேறு சேவைகளை அளித்து வரும் தனியார் நிறுவனமும், வேர்ட்பிரஸ் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேவை என, அழைப்பு விடுத்துள்ளது.பணியிடம் கோவை என்பதும், முழுநேரப் பணி என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் இன்ஜி., பட்டதாரிகள் உருவாகும் நிலையில், ஐ.டி., துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவது, இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்