அரசு பள்ளிகளுக்கு இன்று வேலை நாள்
புதுச்சேரி : விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரி அனைத்து அரசு பள்ளிகளும் இன்று, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மற்றும் காரைக்காலில், அதிக வெயில் காரணமாக, கடந்த ஜூன் 7ம் தேதி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில், அக்டோபர் 19ம் தேதி, பள்ளிகள் வேலை நாளாக அறிவித்தும், அந்த நாளை, ரத்து செய்யப்பட்டுள்ளது.அந்த விடுமுறை, நாளை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் இன்று 11ம் தேதி இயங்கும் என, அவர் தெரிவித்துள்ளார்.