உள்ளூர் செய்திகள்

சென்னையில் சீக்வல் லாஜிஸ்டிக்ஸ்-ன் தங்கப்பாதுகாப்பு பெட்டகம்

சென்னை: சீக்வல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் தனது மூன்றாவது மற்றும் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக கிடங்கு மண்டலத்தில் தங்கப்பாதுகாப்பு பெட்டகத்தை அமைக்க உள்ளது.தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி செயலாக்க மண்டலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், சென்னை (கடல்) துறைமுகத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது சீக்வல் நிறுவனத்திற்கு உலகெங்கிலும் இருந்து சிறந்த போக்குவரத்திற்கான இணைப்பை வழங்குகிறது, துறைமுகத்திலிருந்து தடையற்ற வர்த்தக கிடங்கு மண்டலத்திற்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த தொலைவு கொண்ட பாதை உள்ளது. வான் வழி மற்றும் கடல் வழி சரக்குப் போக்குவரத்துகளுக்கு இந்த வழித்தடம் ஏற்றதாக அமைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகைப் பயன்பாடு கொண்ட சென்னை நகரில் நாட்டின் அனைத்து முக்கிய சந்தைகளுக்கும் நேரடியான, விமானம், சாலைப் போக்குவரத்திற்கான இணைப்பைக் கொண்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் சந்தை தேவைகளை ஒரே நாளில் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்