உள்ளூர் செய்திகள்

சர்வதேச காடுகள் தினம்; பள்ளியில் விழிப்புணர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி வரவேற்றார்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் பேசுகையில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஐந்து மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். மரங்களை நட்டு வளர்ப்பதின் வாயிலாக, பறவைகள் ஒவ்வொன்றும் தங்கள் இல்லங்களை தேடி வரும். அதன் வாயிலாக சரணாலயத்தை நாம் இருந்த இடத்திலிருந்து பார்க்கலாம், என்றார்.பொள்ளாச்சி வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல் பாடினார்.மனோன்மணி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், பிறந்த நாள், திருமண நாள், இல்ல விசேஷங்களின் போது, மரங்களை நட்டு வளர்ப்பதன் வாயிலாக, புவி வெப்பமடைதலை குறைக்கலாம், என்றார்.விதைப்பந்துகள் தயாரித்த மாணவர்களை பாராட்டியதுடன், ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் வழங்கப்பட்டது. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர், 70 மரக்கன்றுகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.செண்பகம், கொய்யா சீதா மற்றும் மூலிகைகள்செடிகளை மாணவர்கள் தங்கள் இல்லங்களில் வளர்க்க வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் கீதா செய்தார்.குமரலிங்கம்சாமராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சர்வதேச காடுகள் தினத்தையொட்டி, சிறார் இதழ்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மடத்துக்குளம் ஒன்றியம் சாமராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சர்வதேச காடுகள் தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்படும் சிறார் இதழ்களில், வெளிவரும் காடுகள் குறித்த செய்திகளை, சிறார் இதழ்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து, சிறார் இதழ்களின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கு மாணவர்களின் படைப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் சமீமா, ஆசிரியர் சங்கீதா செய்திருந்தார். அதேபோல் மேற்கு குமரலிரங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்