உள்ளூர் செய்திகள்

மாநில அளவில் சிறப்பிடம் மாணவிக்கு பாராட்டு

புதுச்சேரி: 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவிக்கு,தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் வாழ்த்து தெரிவித்தார்.ஒதியம்பட்டு குளூனி பள்ளியில் படித்த, உருளையன்பேட்டை தொகுதி ராஜிவ்காந்தி நகரை, சேர்ந்த மாணவி சஹானா, 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தார்.இதையறிந்த தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், மாணவி சஹானாவிற்கு நேரில் சந்தித்து, கல்வி உபகரணங்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டினார்.தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஆதிநாராயணன், துணை அமைப்பாளர்கள் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், யோகேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஸ்ரீதர், தொகுதி கிளை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்