தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: கடந்த ஜனவரி 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 12) வெளியிடப்படுகின்றன.இந்த தேர்வில் மொத்தமாக 1,43,351 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற 1000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்) உயர்நிலைப் பள்ளிக்கல்விக்காக சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 வீதம், 10 மாதங்களுக்கு மொத்தமாக ரூ.10,000 அளவு நிதி உதவி வழங்கப்படும்.மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் RESULTS பிரிவிலும், TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION பகுதியில் நுழைந்து பார்வையிடலாம்.மேலும், ஊக்கத்தொகை விபரங்கள் தொடர்பான தகவல்களும் அதே இணையதளத்தின் Other Examination பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டு இருக்கும்.