உள்ளூர் செய்திகள்

மாநில கல்வி கொள்கையில் சந்தேகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னை: 'தமிழக அரசு வெளியிட்ட மாநில பள்ளிக்கல்வி கொள்கை, வரைவா அல்லது இறுதி வடிவமா என்பதை, பள்ளிக்கல்வி துறை தெளிவுபடுத்த வேண்டும்' என, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வி துறை செயலருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:தமிழக அரசு அமைத்த உயர்மட்ட குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில பள்ளிக்கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. அது, கொள்கையின் தொடக்க வரைவு தான். தொடர்ந்து கருத்துக்களை பெற்று மேம்படுத்தப்படும் என, ஆக., 12ம் தேதி வெளியான, உங்களின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.அது உண்மை எனில், உயர்மட்ட குழு அறிக்கையை வெளியிட்டு, மாநில கல்விக் கொள்கை வரைவா அல்லது இறுதி வடிவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.காரணம், அந்த குழுவில் இருந்தவர்களில் பலர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சமமான கற்றல் வாய்ப்பு, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள். அப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்ட பரிந்துரைகளை தந்தால், அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்