உள்ளூர் செய்திகள்

துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அன்னுார்: கோவை புறநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி அன்னுார் பேரூராட்சியில், சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இதை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், பள்ளி தாளாளர் பிரேம் தேவ், தலைமையாசிரியை மேரி சகிலா உள்பட பலர் பங்கேற்றனர்.அரசு உதவி பெறும் சொக்கம்பாளையம் தேசிய வித்யாசாலை பள்ளியி லும் நேற்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான கதிர் மில்ஸ் பள்ளியில், காலை உணவு திட்டம் நேற்று துவக்கப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன், சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியிருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் மன்னவன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்