உள்ளூர் செய்திகள்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மோசூர் அரசு தொடக்கப்பள்ளி, சூரை அரசு உயர்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது .இதனால் மாணவர்கள், அவதியடைந்தனர். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது .இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்