உள்ளூர் செய்திகள்

தேசிய விளையாட்டு விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்

புதுடில்லி: 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி நவம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கர் உள்ளிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் முன்பு செப்டம்பர் 29 வரை ஏற்கப்பட்டன. தற்போது, விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 28-இல் இருந்து நவம்பர் 4-ஆம் தேதி (செவ்வாய்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் dbtyas-sports.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இதுகுறித்து தகவல் பெறப்பட்டுள்ளன.நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்