பள்ளிக்கு இ -மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
வடவள்ளி: சோமையம்பாளையத்தில் பி.எஸ்.பி.பி., மில்லேனியம் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை, 9:30 மணிக்கு, பள்ளி இ-மெயிலுக்கு, ஒரு இ-மெயில் முகவரியில் இருந்து, பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது.பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். வெடிகுண்டு ஏதும் இல்லை. இந்த மிரட்டல் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.