உள்ளூர் செய்திகள்

தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

திருப்பூர்: இந்திய அஞ்சல் துறை சார்பில், சர்வதேச அளவிலான கடிதப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 'டிஜிட்டல் உலகத்தில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து இருப்பது ஏன் முக்கியம்' என்ற தலைப்பில் கடிதம் எழுத வேண்டும். இதில், 9 - 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.மாநில அளவில் முதலிடத்துக்கு, 25,000, இரண்டாமிடத்துக்கு, 10,000, மூன்றாமிடத்துக்கு, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளிவில் முதல் மூன்று இடத்துக்கு, 50,000; 25,000; 10,000 ரூபாய், சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.இப்போட்டியில் பங்கேற்க அருகிலுள்ள தபால் நிலையத்தில் விண்ணப்பம் பெற்று, 3 போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகலுடன் இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் - 641601 என்ற முகவரிக்கு வரும் பிப்., 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என, கோட்ட தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்