பாம்பன் கல்லுாரியில் மாநில அளவிலான நடன போட்டி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் மாநில அளவில் நடனப் போட்டிகள் நடந்தது.நேற்று அன்னை ஸ்கொலாஸ்டிகா கல்லுாரி வளாகத்தில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையே 'நெக்ஸ்ஜென் - 26' போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல கல்லுாரிகளை சேர்ந்த 150 மாணவிகள் பங்கேற்று நடனம், மண்டலா கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தது. இதில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ராமநாதபுரம் வேலு மனோகரன் பெண்கள் கல்லுாரி முதலிடம், முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரி 2ம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. போட்டியை கல்லுாரி முதல்வர் ஆனிபெர்பெட் சோபி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் கலைவாணி உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.