உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: பையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி, நுழைவுத் தேர்வுகள் குறித்த தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்ததுகிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில், வாழவச்சனுார் அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்தும், அதன் மூலம் உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேரும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினர்.நீட், ஜே.இ.இ., கிளாட், ஐ.சி.ஏ.ஆர்., போன்ற உயர்கல்வி நுழைவு தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போட்டி தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதில், 10க்கும் மேற்பட்ட வாழவச்சனுார் அரசு வேளாண் கல்லுாரி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்