உள்ளூர் செய்திகள்

தொழில்முனைவோர் திறன் மேம்பாடு என்.ஜி.பி., கல்லுாரியில் கண்காட்சி

கோவை: என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி மேலாண்மை துறை சார்பில், தொழில்முனைவோர் திறன் மேம்படுத்தும் நோக்கில், என்.ஜி.பி., எக்ஸ்போ கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கே.எம்.சி.எச்., அறக்கட்டளையின் தலைவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தார்.இக்கண்காட்சியில், மாணவர்கள் 60க்கும் மேற்பட்ட அரங்குளை அமைத்து இருந்தனர். இதன் வாயிலாக, தொழில்முனைவோர் வாய்ப்புகள், வழிமுறைகள், சந்தைப்படுத்துவதில் உள்ள சவால்கள், விற்பனை திறன் மாணவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.நிகழ்வில், என்.ஜி.பி., கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர்கள் டாக்டர் அருண், மதுரா, முதன்மை செயல் அலுவலர் புவனேஷ்வரன், கல்லுாரி முதல்வர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்காட்சியை மேலாண்மை துறைத்தலைவர் மோகன் ஒருங்கிணைத்து நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்