உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் தொழில் துறை ஹேக்கத்தான்

கோவை: துடியலூர், வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், 'எஸ்.ஆர். இ.சி., இன்னோவேட் 2026' என்ற தொழில்துறை ஹேக்கத்தான் மற்றும் திட்ட எக்ஸ்போ நடந்தது.விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன், தொழில்துறை - கல்வித்துறை ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் தொழில்துறை நுண்ணறிவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.ஹேக்கத்தான் மற்றும் திட்ட எக்ஸ்போவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த வடிவமைப்பு, சமூக தாக்கம், புத்தாக்கம், ஸ்டார்ட் அப் யோசனைகள் அங்கீகரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்