உள்ளூர் செய்திகள்

மலேர்கோட்லாவில் மருத்துவ கல்லூரி, பஞ்சாப் முதல்வர் தகவல்

மலேர்கோட்லா: “மலேர்கோட்லாவில், 563 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும்,” என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசினார்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்லா நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற, மாநில முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது:ரம்ஜான் பண்டிகை ஒருவருக்கொருவர் நலம் தேடும் பண்டிகை. மலேர்கோட்லாவின் இந்த புனித ஈத்காவில் நான் அளவற்ற அமைதியை உணர்ந்தேன். இது, சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகை. இங்கு நாம் ஒன்றாக அமர்ந்து நல்லிணக்கத்துடன் ரம்ஜான் கொண்டாடுகிறோம். பஞ்சாப் மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயலும் எந்த சக்திக்கும் அனுமதி கிடையாது. தீய சக்திகள், இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்.மலேர்கோட்லா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பூமி. இங்கிருந்து தான் பத்தாவது சீக்கிய குருவின் இளைய சாஹிப் சாதாக்களுக்கு ஆதரவாக ஒரு குரல் எழுப்பப்பட்டது. அந்தக் குரல் இன்றும் பிரபஞ்சம் முழுதும் எதிரொலிக்கிறது.இங்கு, 25 ஏக்கர் நிலம் பாதுகாப்புத் துறையிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 563 கோடி கோடி ரூபாய் செலவில், 100 எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டப்படும். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.கன்னா மற்றும் லுாதியானா ஆகிய நகரங்களுக்கு இடையே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை இல்லாத குறையை மலேர்கோட்லா மருத்துவமனை நிவர்த்தி செய்யும். மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனையும் கட்டப்படும்.பஞ்சாப் மாநிலம் முழுதும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்