நற்பண்புகளே மனிதனுக்கு முக்கியம் பட்டமளிப்பு விழாவில் அறிவுரை
குன்னூர்: குன்னூர் சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரியின், 19வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை சி.எஸ்.ஐ., மறை மாவட்ட பிஷப் பிரின்ஸ் கால்வின் பட்டங்கள் வழங்கி பேசுகையில், பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.நீங்கள் பெற்ற கல்வி வாயிலாக சமூகத்திற்கு நன்மை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்க வேண்டும்.செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், திறமை, கல்வி அறிவை விட, ஒழுக்கம், நேர்மை மற்றும் நற்பண்புகளே மனிதனுக்கு மிகவும் முக்கியம், என்றார்.பல்வேறு துறைகளை சேர்ந்த, 92 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தாளாளர் காட்வின் டேனியல், கோவை மறை மாவட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.