வெயிலின் தாக்கம் காரணமாக மரத்தடியில் படித்த மாணவர்கள்
புதுச்சேரி: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அனுமதியுடன், வளாகத்தில் உள்ள மரங்களில் கீழே அமர்ந்து படித்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், அத்தியவாசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் கடும் வெயில் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 27ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவிற்கான வகுப்புகள் தற்போது நடந்து வரும் நிலையில், வாதானுார் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள், வெயின் தாக்கம் காரணமாக வகுப்பறைகளில் இருந்து ஆசிரியர்கள் அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் கீழே அமர்ந்து கல்வி பயின்றனர்.அப்போது, மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்களும் விளக்கம் அளித்தனர்.இதே போல், பல்வேறு அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் ஆசிரியர்களின் அனுமதியுடன், வெயில் தாக்கம் காரணமாக பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் கீழே அமர்ந்து படித்து வருவது குறிப்பிடத்தக்கது.