உள்ளூர் செய்திகள்

தள்ளிப்போன கல்லுாரி தேர்வு; விடுமுறையை இழந்த மாணவர்கள்

தமிழகத்தில் நிலவும் தேர்தல் சூழல் காரணமாக, பல்வேறு பல்கலை 'செமஸ்டர்' தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் வழக்கமாக மே முதல் வாரத்தில் முடிவடைய வேண்டிய பல்கலை தேர்வு, இந்தாண்டு தேர்தல் குறுக்கீடு காரணமாக, மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.அரசு கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: பல்கலை விதிகளின் படி, பணி நாட்கள், ஒரு செமஸ்டருக்கும் அடுத்த செமஸ்டருக்கும் இடையே கட்டாயம், 90 வேலை நாள் இருக்க வேண்டும்.கடந்த செமஸ்டரில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை செப்., வரை நீடித்ததால், வேலை நாட்களை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. பொதுவாக, ஜூலை மாதம், மாணவர் சேர்க்கை முடிவுறும்.ஆனால், பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் தோல்வியுற்று, உடனடி தேர்வெழுதி வெற்றி பெறுபவர்கள் அந்த ஆண்டே, கல்லுாரியில் இணைக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது. உயர்கல்வி சதவீதத்தை அதிகரிக்க, செப்., இறுதி வரையும் கூட மாணவர் சேர்க்கையை, அரசு ஊக்குவித்தது. எனவே, முதல் 'செமஸ்டர்' தேர்வும் சற்றே தள்ளிப்போனது.இதனால், முதல் செமஸ்டருக்கும், இரண்டாம் செமஸ்டருக்கும் இடைப்பட்டு, 90 வேலை நாட்களை எட்டும் முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இடையில் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது; இதனால் தேர்தல் முடிந்த பின் தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு தற்போது தான் துவங்கி நடந்து வருவதால், மாணவ, மாணவியருக்கு வழக்கமாக கிடைக்கும் நீண்ட கோடை விடுமுறை இந்தாண்டு கிடைக்கவில்லை.இருப்பினும், தேர்வு முடிந்த பின், ஜூன், 15ம் தேதி மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. இடைப்பட்ட, 15 நாள் மட்டுமே மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்