உள்ளூர் செய்திகள்

தளி அரசு கல்லுாரியில் சேர்க்கை உதவி மையம்

தேன்கனிக்கோட்டை: தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கை உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வர் ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேன்கனிக்கோட்டை அடுத்த சாப்ரானப்பள்ளி அருகே, தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்குகிறது. இங்கு, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை துவங்கி நடக்கிறது. அதற்காக, கல்லூரி வளாகத்தில், மாணவர் சேர்க்கை உதவி மையம் கடந்த, 7ம் தேதி முதல் செயல்படுகிறது. தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறியீட்டு எண், 1031021 ஆகும். இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்ப பதிவு கட்டணமாக, 2 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாயும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தளி கல்லுாரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையம் மூலமாக, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியும். வரும், 29ம் தேதி வரை மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்படும்.மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் போது, தங்களது மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 98943 94628, 97870 97484 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்