ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் எம்.டெக்., படிக்க அழைப்பு
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' எம்.டெக்., படிப்புக்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.சென்னை ஐ.ஐ.டி., சார்பில், ஆன்லைன் எம்.டெக்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. பணிபுரிவோர், புதிய பட்டதாரிகள் ஆகியோர் ஆன்லைன் வழியில் கல்வி கற்க ஏதுவாக, இந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.இதற்கான 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், https://code.iitm.ac.in என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. எம்.டெக்., படிப்புக்கு விண்ணப்பிப்போர், அதற்கு தொடர்புடைய துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஐ.ஐ.டி., அறிவுறுத்தி உள்ளது.