உள்ளூர் செய்திகள்

சக்தி விக்னேஷ்வரா பள்ளி மாணவர்கள் அபார சாதனை

திருப்பூர்: பெருமாநல்லுார், பொங்குபாளையம் சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலைய பத்தாம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவி ஓவியாஸ்ரீ, 500க்கு 493 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடம். 490 மதிப்பெண்களுடன் ரிதுமிகா இரண்டாமிடம். 489 மதிப்பெண்களுடன், சுவாதிகா, சரண் ஆகிய இருவரும் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.தேர்வு எழுதிய, 114 மாணவர்களில், கணிதம் - 3, அறிவியல் - 6, சமூக அறிவியல் - ஒரு மாணவரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் 4 மாணவர்களும், ஆங்கிலத்தில் ஆறு மாணவர்களும் 99 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பள்ளி மாணவன் பிரனீத், 600க்கு 596 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பெற்று சாதித்துள்ளார். 591 மதிப்பெண்களுடன் நரேன் கார்த்திக் பள்ளி அளவில் இரண்டாமிடம்; 585 மதிப்பெண்களுடன் மாணவி இந்துமதி மூன்றாமிடமும் பிடித்தனர்.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியில் சாதித்த மாணவ, மாணவியரை, பள்ளி முதல்வர் சக்தி வேலுசாமி, தாளாளர் மயிலாவதி, செயலாளர் தாமரைக்கண்ணன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்