உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லுாரிகளில் முதலாண்டு வகுப்பு ஆரம்பம்

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில், புதிதாக சேர்க்கப்பட்ட இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. பள்ளியில் இருந்து கல்லுாரிக்கு அடியெடுத்து வைத்த மாணவ, மாணவியருக்கு, அக்கல்லுாரி முதல்வர் பிரேமலதா, ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.துறைத்தலைவர்கள் ஆங்கிலம் கங்காதரன், புவியியல் அருள், அறிவியல் சார் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அதே போல் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்துடன் வகுப்புகள் தொடங்கின.முதல்வர் காந்திமதி தலைமையில் நடந்த கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றனர். தொடர்ந்து புதிதாக சேர்ந்த மாணவியருக்கு, ஒரு வாரம், ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்