உள்ளூர் செய்திகள்

தேசிய புள்ளியியல் தினம்: வினாடி-வினாவில் அபாரம்

கோவை: ராம்நகரில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தில்(மேற்கு மண்டலம்) புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் புள்ளி விவரங்களின் பங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு 'நிர்வாக தரவுகளின் திறனை வெளிக்கொணர்தல்' என்ற கருப்பொருளை மையமாக கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வினாடி வினா, விவாதம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசு, தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 50 பேர் பங்கேற்று அசத்தினர்.இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ்களை மண்டல இயக்குனர் வினீஷ் வழங்கினார். மூத்த புள்ளியியல் அதிகாரிகள் ரவிச்சந்திரன், ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்