உள்ளூர் செய்திகள்

பள்ளியில் சூழல் கருத்தரங்கம்: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உடுமலை: பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பள்ளித்தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்ற மாணவி அபிநயா வரவேற்றார்.'வனங்களை பாதுகாப்போம்', என்ற தலைப்பில், கலை பண்பாட்டு மன்ற ஆசிரியர் கார்த்திகா ஆனந்தியும், 'நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் மலர் கண்ணும், 'மக்கள் தொகை பாதுகாப்பில் மாணவர் பங்கு', என்ற தலைப்பில் முதுகலை தமிழாசிரியர் சரவணனும் பேசினர்.தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான, பாடல்கள் மாணவர்கள் பாடினர். சுற்றுச்சூழல் மன்ற மாணவி சுபகீதா நன்றி தெரிவித்தார். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்