சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் மாணவ, மாணவியர் ஆக்ரோஷம்
சரவணம்பட்டி: சர்வதேச அளவிலான ஆறாவது கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, சரவணம்பட்டியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், இந்தோனேஷியாவில் இருந்து 15 பேர், கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உட்பட 525 பேர் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் குமிட்டே, கட்டா போட்டிகள் இடம்பெற்றன.மாணவ, மாணவியர் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. டீம் குமிட்டே, டீம் கட்டா, 17 வயதுக்கு உட்பட்ட, 17 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் என ஏழு பிரிவுகளில் 'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.