தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளமறிவியல் வகுப்பு துவங்கியது
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இந்த கல்வியாண்டுக்கான வேளாண் இளமறிவியல் வகுப்பு நேற்று துவங்கியது.தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை வேளாண் பிரிவுக்கும், இணையதளம் மூலம் இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.வேளாண் பல்கலையில், 2516 இடங்களுக்கும், அதன் இணைப்புக் கல்லுாரிகளில் இடஒதுக்கீட்டின் கீழ், 3051 இடங்களுக்கும், அண்ணாமலைப் பல்கலை வேளாண் பிரிவில், 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.நேற்று கல்லுாரிகள் திறக்கப்பட்டன. வேளாண் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் (பொ) ரவீந்திரன் மாணவர்களை வரவேற்று பேசினார்.