உள்ளூர் செய்திகள்

எதிர்கால திறன், ஏ.ஐ., கல்வி குறித்த மாநாடு

மதுரை: மதுரை ரிங் ரோடு ஜி.ஆர்.டி., ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் மாறிவரும் கல்விச் சூழல், தொழில்நுட்பம், எதிர்காலத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை தயார்படுத்தும் உத்திகள் குறித்து மாநாடு நடந்தது.சி.ஐ.ஐ., மதுரை மண்டல துணைத் தலைவர் பாலாஜி வெங்கடராமன் வரவேற்றார். மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் உமா பாஸ்கர் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.டில்லி சி.பி.எஸ்.இ., முன்னாள் கல்வி இயக்குநர் பாலசுப்பிரமணியன், மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் முத்தையா ஆகியோர், தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள், கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல், வகுப்பறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை புகுத்துதல், மாணவர்களின் மனநல பாதுகாப்பு குறித்து விரிவாக பேசினர்.எதிர்கால திறன்கள், நடைமுறை சார்ந்த கற்றல், ஆசிரியர்களுக்கான ஏ.ஐ., கருவிகள் பயன்பாடு குறித்து தொழில்நுட்ப அமர்வுகள் நடந்தன. சி.ஐ.ஐ., மண்டல கல்விப் பிரிவு கன்வீனர் சேவுகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்