உள்ளூர் செய்திகள்

இயற்கை விவசாயம் எப்படி? வேளாண் மாணவியர் பயிற்சி

சூலூர்: கோவை வேளாண் பல்கலை மாணவியர், 11 பேர், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தங்கி, களப்பயிற்சி பெறுகின்றனர்.இயற்கை விவசாயி தேவராஜ் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை விவசாய பண்ணையை பார்வையிட்டனர். அவர் மேற்கொள்ளும் இயற்கை விவசாய முறைகள் மற்றும் செயல்படுத்தி வரும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர். அவரது தோட்டத்தில், அரசு மானியத்தில் அமைத்துள்ள சூரிய ஒளி உலர்த்தி அமைப்பை பார்வையிட்டு, அதன் செயல்முறைகள் குறித்து நேரடியாக பயிற்சி பெற்றனர்.மிளகாய், ஆமணக்கு, முருங்கை,வெங்காயம் விதை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை உலர்த்துவது குறித்தும், அவற்றை பதப்படுத்தி சந்தைப்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தனர்.சூரிய ஆற்றலை பயன்படுத்தி விளை பொருட்களை உலர்த்துவதால், மின் செலவு குறைகிறது. விளை பொருளின் தரம் பாதுகாக்கப்படுகிறது. பதப்படுத்தி சேமித்து சந்தைப்படுத்துவதால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கிறது, என, விவசாயி தேவராஜ் மாணவியரிடம் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்