தேர்வு வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு: ஈரோட்டில் வரும், 21ல் நடக்கும் ஊரக திறனாய்வு தேர்வுக்கான வினாத்தாள் வந்தடைந்தது.தமிழக கிராமப்புறங்களில் உள்ள, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, -மாணவியரின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 9ம் வகுப்பு மாணவ-, மாணவியருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் வரை அதாவது 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு வரும், 21ல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வை மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில், 17 மையங்களில், 3,786 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதே போல் தமிழக திறன் போட்டி தேர்வு வரும், 21 மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கல்லுாரி மாணவ, மாணவியர், 3,642 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான வினாத்தாள்களும், காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.