பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை
மதுரை: தமிழக அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், ஓமன் நாட்டில் முன்னணி நிறுவனத்தில் பணியாற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 22 முதல் 30 வயதிற்குட்பட்ட பொது பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு இலவச விமான டிக்கெட், விசா மற்றும் இருப்பிடம் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி அனுபவ சான்றிதழ் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து போட்டோவுடன் டிச.13ம் தேதி காலை 9 மணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் இடம்: தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 45, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.