உள்ளூர் செய்திகள்

அலகாபாத் ஐ.ஐ.ஐ.டி. -இல் பிஎச்.டி. படிப்பு

அலகாபாத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி(ஐ.ஐ.ஐ.டி.), தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் தகவல் பாதுகாப்பு துறைகளில், அடுத்த 2011-12 கல்வியாண்டிற்கான பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பு சேர்க்கையை ஆரம்பித்துள்ளது. பிஎச்.டி. அராய்ச்சி படிப்பானது, 2011, ஜூலை 15 முதல் தொடங்குகிறது. தங்களின் தகுதித்தேர்வு இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் பிஎச்.டி. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பிஎச்.டி. படிப்பில் சேரும் முன்பாக, தங்களின் தகுதி பட்டங்களை பெறுவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட வேண்டும். ஐ.ஐ.ஐ.டி., அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளின்படி, பிஎச்.டி. படிப்பிற்காக பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து விருப்பமுள்ள மாணவர்கள் அனுப்பலாம். படிவத்தின் விற்பனை மற்றும் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011, பிப்ரவரி 6.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்