உள்ளூர் செய்திகள்

பள்ளிக் கட்டடம் ஆட்டம் மாணவர் நிலை பரிதாபம்

இப்பள்ளியில், போதிய கட்டட வசதி இல்லாததால், 1993ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட கட்டட திட்டத்தின் கீழ் கூடுதலாக, மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. இப்பள்ளியில் 58 மாணவர்களும், 62 மாணவியரும் படித்து வருகின்றனர். இந்த கான்கிரீட் கட்டடத்தில், இரு வகுப்புகளும், ஓட்டு கட்டடத்தில் மூன்று வகுப்புகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கான்கிரீட் கட்டடம் சரிவர பராமரிக்கப்படாததால், கட்டடத்தின் மேற்கூரை, சுவர் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டது;  சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அனைத்து வகுப்புகளும், ஓட்டு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன;  கட்டடமும் ஆட்டம் கண்டு வருகிறது. இக்கட்டத்திற்கு அருகில் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து விழும் தேங்காய், மட்டை போன்ற பொருட்கள் ஓட்டு கட்டத்தின் மேல் விழுவதால், கட்டடம் சேதமடைந்து வருகிறது. மேலும், கட்டடத்தின் உத்திரமும் ஆட்டம் கண்டுள்ளதால், இவற்றுக்கு ‘முட்டு’ கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறு, சிறு மாணவர்கள் படிக்கும் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பள்ளி கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால், பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில்:‘பழங்காலக் கட்டடம் என்பதால், கட்டடம் சேதமடைந்து வருகிறது. இதனால், மாணவர்கள் பாதிப்படைகின்றனர் எனவும், பள்ளிக்கு மாற்று வகுப்பறைகள் கட்டி தரும்படியும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய கட்டுபாட்டில் இருந்த பள்ளி கட்டடம் பேரூராட்சியின் கட்டுபாட்டிற்கு மாற்றப்பட்டது. அவர்கள்தான், கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்