உள்ளூர் செய்திகள்

கோவை மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கு தனி சேர்க்கை

கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையுடன் இணைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தங்களின் சொந்த நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க, தனி சேர்க்கை நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் தங்களுக்கு உரிய நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க, மையப்படுத்தப்பட்ட சேர்க்கை நடைமுறையை தவிர்த்து, தங்களுக்கென தனி செயல்முறையை இந்த கூட்டமைப்பு வகுத்துள்ளது. கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் சுமார் 175 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்திலுள்ள சுயநிதி தொழில்கல்வி மற்றும் அறிவியல்-கலை கல்லூரிகளின் கூட்டமைப்பிற்கு சென்னையின் ஜேப்பியார் கல்லூரி தலைமை வகிக்கிறது. ஆனால் அந்த கூட்டமைப்புடன் இணைந்து பொது முறையில் சேர்க்கையை மேற்கொள்ளாமல், தங்களுக்கென்று ஒரு தனி சேர்க்கை செயல்முறையை கோவை கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்த புதிய திட்டத்தினால், சென்னை மற்றும் கோவையிலுள்ள பிரபல தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு குறிவைத்துள்ள மாணவர்கள், இனிமேல் தனித்தனியாகவே விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும். தமிழகத்தில் மொத்தம் 490 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், மாணவர் சேர்க்கையை எளிதாக்கி, நிர்வாக வசதியை மேம்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரகங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்