உள்ளூர் செய்திகள்

காவல் பணித்திறன் போட்டி தமிழக போலீசாருக்கு 13 பதக்கம்

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில், அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் நடந்தன. தடய அறிவியல் புலன் விசாரணை திறன் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ், போட்டிகள் நடந்தன.இதில், 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசங்கள், ஏழு மத்திய காவல் படைகளைச் சேர்ந்த மொத்தம், 1,327 போலீசார் உட்பட, 29 அணிகள் பங்கேற்றன. தமிழக காவல் பயிற்சியகத்தை சேர்ந்த, கூடுதல் எஸ்.பி., செல்வகுமார், டி.எஸ்.பி., பாபு ஆகியோர் தலைமையில், 76 போலீசார் போட்டியில் பங்கேற்றனர்.இப்போட்டியில், 5 தங்கம், தலா 4 வெள்ளி, வெண்கலம் என, 13 பதக்கங்கள் வென்று, தமிழக போலீசார் சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தடய அறிவியல் போட்டியில், சவுந்திரபாண்டி, ஹரிஹரசுகன், அர்ச்சுனன் ஆகியோர் தங்கம் வென்றனர்.கணினி திறன் போட்டியில், மதியழகன், மோப்ப நாய் திறன் போட்டியில் நிவாஸ் ஆகியோர் தங்கம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்