பாரதியார் பல்கலை., முதுகலை படிப்பு ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் அன்னப்பூரணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; பாரதியார் பல்கலைக்கூடத்தில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகள் சேர விரும்புவர்கள் பல்கலைக்கூட இணையதளத்தின் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.இங்கு இசை, நடனம் மற்றும் நுண்கலை துறைகளில் முதுகலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இசை துறையில் வாய்ப்பாட்டு இசை, வீணை, வயலின் மற்றும் மிருதங்கமும், நடனத்துறையில் பரதநாட்டியமும், நுண்கலை துறையில் சிற்பக்கலை, வண்ணக்கலை மற்றும் பயன்பாட்டுக்கலை ஆகியவைகள் உள்ளன.கலை படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.