ஒன்றிய குழு சாதாரண கூட்டம்; 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
உடுமலை : துவக்கப்பள்ளிகளில் கழிப்பிடங்களை பராமரித்தல் உட்பட 25 தீர்மானங்கள் குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.குடிமங்கலம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். துணை தலைவர் புஷ்பராஜ், பி.டி.ஓ., மாலா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, வினியோகம் பாதிக்கிறது. பொன்னேரி, கொங்கல்நகரம் உள்ளிட்ட இடங்களில், குழாய் உடைந்து பல நாட்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.குடிநீர் வடிகால் வாரியத்தினர் அலட்சியமாக உள்ளனர் என ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து, அய்யம்பாளையம்புதுார், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், சுங்காரமுடக்கு உள்ளிட்ட அரசுப்பள்ளிகளில், கழிப்பிட கட்டடங்களை பழுது பார்த்தல், அடிவள்ளி, லிங்கமநாயக்கன்பட்டிபுதுார் அரசுப்பள்ளி ஆய்வகங்களுக்கு, கிரில் கேட் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் செய்யப்பட்ட வேலைகளுக்கு அங்கீகாரம் பெறுதல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.