உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை விற்பனையாளர் பணி 3 நாளில் 2,000 பேரிடம் நேர்முகத்தேர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நடந்து வரும் நேர்முகத்தேர்வில், மூன்று நாளில், 2,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 117 ரேஷன்கடை விற்பனையாளர்கள், கட்டுனர் பணிக்கு, 6,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த, 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது.இதுகுறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்படி கடந்த, 25 முதல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது. காலை, 8:30 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் நேர்முகத்தேர்வில் நாளொன்றுக்கு, 750 பேர் கலந்து கொள்கின்றனர்.வரும், டிச.,3 வரை நேர்முக தேர்வு நடக்கிறது. கடந்த மூன்று நாட்களில், 2,000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள், வட்டார வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் நேர்முகத்தேர்வை நடத்தி வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்