அரசு பள்ளிகளில் ஆங்கில திறனை வளர்க்க லெவல் அப் திட்டம்
சென்னை: அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் வகையில், 'லெவல் அப்' திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில மொழிப் புலமையில் பின்தங்கி உள்ளனர். அதை மேம்படுத்தும் வகையில் இரண்டு, மூன்று எழுத்துக்கள் உள்ள வார்த்தைகளை வாசிக்கவும், அவற்றின் அர்த்தங்களை அறிந்து, வாக்கியங்களில் பயன்படுத்தவும் கற்பிக்கும் வகையில், 'லெவல் அப்' என்ற பெயரில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.அதை செயல்படுத்த, மாத வாரியான திட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், https://sites.google.com/view/tnlevelup என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலக்குகளை நிர்ணயித்து, மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து மதிப்பிடும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.