குன்னூர் மாணவர்கள் மாநில அளவில் 4 ரேங்க்
இதே பள்ளி மாணவன் பிரெஞ்சு மொழிப்பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். பத்தாம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வில், மலையாள மொழிப்பாடத்தில் குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவன் முகமது ரிஸ்வான், 100க்கு 94 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை முகமது பாப்பு; கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இதே பள்ளி மாணவன் பிரபுல் மேத்யூ, 100க்கு 90 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை மேத்யூ சிரியாட்; கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொரு மாணவன் மிக்கி சாபு; மலையாள பாடத்தில் 100க்கு 89 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவரது சந்தை சாபு; கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர். இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவன் ராஜு வெங்கடபதி; இவர் பிரெஞ்சு பாடத்தில் 100க்கு 94 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை மணி; திருச்சியை சேர்ந்தவர்.