நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 43 மாணவர் தேர்ச்சி
ஈரோடு: நடப்பாண்டுக்கான மருத்துவ நுழைவு (நீட்) தேர்வு சமீபத்தில் வெளியானது. இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய, 43 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு (அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள்) சான்று வழங்கப்பட்டுள்ளது. நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த சுவேதா, 534 மதிப்பெண் பெற்றுள்ளார். இதே போல், 28 மாணவிகள் நீட் தேர்வு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் வகையில் மதிப்பெண் பெற்றுள்ளனர்.