உள்ளூர் செய்திகள்

குழந்தை நேய பள்ளி மேம்பாடு ரூ.4.87 கோடியில் 568 வகுப்பறை

திருவள்ளூர்: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 4.87 கோடியில், 568 வகுப்பறை கட்டட பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார், நெமிலியகரம் ஊராட்சி பகுதியில் கலெக்டர் பிரபுசங்கர், ஊரக வளர்ச்சி துறையின்கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டட பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த கிராமங்களில், தலா, 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு வரும் குழந்தை நேய பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின் கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், மாணவர்களின் நலன் கருதி, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 568 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி, 4.87 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.இந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 446 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் வாயிலாக 10,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, மகேஸ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்