உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஏப்.,6ல் திறப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு

ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ஏப்.,6ல் திறப்பு விழா நடத்துவதற்காக ஆய்வு நடந்தது.ஊட்டி கால்ப் கிளப் பகுதியில், 40 ஏக்கரில், 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஏப்., 6 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிலையில், நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, நம் நாட்டில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மலை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது. தேசிய அளவில், பழங்குடியினர்களுக்கு பிரத்தியேகமாக, 50 படுக்கை வசதிகள் உட்பட உயர்தர சிகிச்சை கருவிகளுடன், 700 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக, ஏப்., 6ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதை தவிர, நீலகிரியில் மருத்துவமனை கட்டமைப்புகளை முழுமை பெறும் வகையில் புதிதாக, 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களும் திறக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்