உள்ளூர் செய்திகள்

கலை, அறிவியல் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு; 8,386 மாணவர்களுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு

புதுச்சேரி : கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி, 8,386 பேருக்கு சீட் ஒதுக்கியுள்ளது. இம்மாணவர்கள் வரும் 28 ம்தேதிக்குள் கல்லுாரி சேர சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சென்டாக் சீட் ஒதுக்கீடு செய்தது. இரண்டாம் கட்டமாக, நேற்று நீட் அல்லாத படிப்புகளான கலை, அறிவியல், வணிகவியல், தொழில் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கியுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் கல்லுாரி, பாட பிரிவிற்கு முன்னுரிமை கொடுத்து 8,386 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.டெக்., படிப்பில் 3,234 மாணவர்களுக்கும், கலை அறிவியல் படிப்புகளில் 3,267 மாணவர்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் சென்டாக் இணையதளத்தில் நுழைந்து, இன்று 23ம் தேதி காலை 11:00 மணிக்குள் தெரிவிக்கலாம் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆட்சேபனை பரிசீலனைக்கு பிறகு சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய மாணவர் சேர்க்கை கடிதத்தை இன்று 23ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சீட் கிடைத்த மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் அந்தந்த கல்லுாரி முதல்வரை சந்தித்து, வரும் 28 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேரலாம். எஸ்.எம்.எஸ்., மூலம் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்பட்டால் 0413-2655570, 2655571 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்