கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலவழி கல்வி கிடைக்குமா?
ஸ்ரீவில்லிபுத்தூர்: திடீர் உத்தரவால், கிராம மாணவர்களின் ஆங்கில வழி கல்வி, கானல் நீராகும் நிலை உள்ளது. அரசு உதவிபெறும் பல பள்ளிகளில் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை மெட்ரிக். பள்ளிகளில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். கடந்த கல்வியாண்டு வரை ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 40, அதிகபட்சமாக 60 மாணவர்கள் சேர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஆட்சியில், பள்ளிக்கல்வி இயக்குனராக பொறுப்பு வகித்த வசுந்தரா தேவி, &'2011-2012 கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் அதிகபட்சமாக 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்&' என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு தேர்தல் நடைமுறையால் மே 10 ம் தேதிதான் பள்ளிகளுக்கு அனுப்பபட்டது. அதன்படி அரசுஉதவி பெறும் பள்ளிகளில் இதற்கான தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இதனால் கிராம மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். &'ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை தளர்த்தி, ஏழை மாணவர்களுக்கும் ஆங்கிலவழி கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.