மெட்ரிக் சிறப்பு தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்
கட்டணம்: ஒரு பாடத்திற்கு 135 + 500 என மொத்தம் ரூ.635, இரண்டு பாடங்களுக்கு 235 + 500 மொத்தம் ரூ.735, மூன்று பாடங்கள் 335 + 500 ஆகமொத்தம் ரூ.835 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை -600 006 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 22 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், ஹால்டிக்கெட்கள் வழங்கப்படும்.